Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: தாறுமாறாக உயர்ந்த “பெட்ரோல் விலை”….. “அண்டை நாட்டை” நாடும் பொதுமக்கள்….!!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கிரீஸில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடான பல்கேரியாவிற்கு சென்று அதனை வாங்கி வருகிறார்கள்.

ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையே 35 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக கிரீஸில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதாவது கிரீஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 167 ரூபாயாக உள்ளது.

ஆனால் அண்டை நாடான பல்கேரியாவில் கிரீசை விட ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 ரூபாய் கம்மியாக விற்கப்படுகிறது. இந்நிலையில் கிரீஸின் எல்லையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் அண்டை நாடான பல்கேரியாவிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வருகிறார்கள்.

Categories

Tech |