உக்ரைன் போரில் படைவீரர்கள் பல பேரை இழந்ததால், அவர்களது இடத்தை நிரப்ப அப்பாக்களை களமிறக்க ரஷ்யா முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் 60 வயது வரையுள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ராணுவத்தில் இணையுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைன் 18,300 ரஷ்யப்படை வீரர்கள் உக்ரைன் போரில் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள சூழ்நிலையில், 15,000 ரஷ்யப் படையினர் இறந்து இருக்கலாம் என்று நேட்டோ அமைப்பு கருதுகிறது. எனவே இழந்த வீரர்களுக்கு பதிலாக போர் செய்வதற்காக ரஷ்யா முன்னாள் ராணுவ வீரர்களை மீண்டும் ராணுவத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இதனிடையில் புதிதாக ராணுவத்தில் சேர்ந்த 18-27 வயது வரையுள்ள அனுபவம் இல்லாத ராணுவ வீரர்கள்தான் ரஷ்ய இராணுவத்தில் கால்பகுதி இருக்கிறார்களாம். ஆகவே இந்த அனுபவம் அதிகம் இல்லாதராணுவ வீரர்கள் ஆயுதங்கள், மருந்துகள் ஆகியவற்றை கொண்டு செல்லும் ட்ரக் ஓட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்களுடன் போகும் 60 வயதுடைய ஒரு வீரர் ஆயுதம் ஏந்தி போரில் ஈடுபடுவார். எனவே ரஷ்ய ராணுவத்தில் படை வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் அப்பாக்களை களமிறக்க அந்நாடு முயற்சி செய்து வருகிறது.