Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியது…. லீக்கான தகவல்….!!!!

தன் அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி போரை துவங்கியது. மிகப் பெரிய படைபலத்தின் வாயிலாக உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்து விடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே சமயத்தில் ரஷ்யாவும் போரிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. இதன் காரணமாக போர் முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்ற சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்யபடைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தது. அங்கு உள்ள விமானப் படை தளம் மற்றும் ரயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. விமானப் படை தளத்தின் மீது 13 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இவற்றில் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட 3 பேர் பலியானதாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் பிராந்திய கவர்னர் ஆண்ட்ரி ரைகோவிச் தெரிவித்தார். இதற்கிடையே ரஷ்யபடைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை குறி வைத்து உக்ரைன் ராணுவமானது பீரங்கி குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் மேற்கொண்டது.

ரஷ்யபடைகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் தெற்கு கெர்சான் பிராந்தியத்திலுள்ள டினீப்பர் ஆற்றுபாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தனர். இந்நிலையில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியிலுள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், உக்ரைனும் கையெழுத்திட்ட சில மணிநேரத்துக்குள்ளாக ரஷ்ய படைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தியது. ஒடேசா துறைமுகத்தின் மீது ஏவுகணைதாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவல்கள் இல்லை. ஒப்பந்தத்தைமீறி கருங்கடல் துறைமுகத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனிலுள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க வௌியுறவு அமைச்சகம் பலியான அமெரிக்கர்களின் குடும்பத்தினருடன் தொடர்பிலிருந்து வருவதாகவும், தேவையான அனைத்து தூதரக சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |