Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: புதின் மீது போர்க்குற்ற விசாரணை தொடங்க வேண்டும்…. வலியுறுத்திய அமெரிக்க அதிபர்…!!

உக்ரேன் மீது ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் தலைவர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் சிக்கி உக்ரேன் பொதுமக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |