ரஷ்யாவில் உக்ரேன் மீதான போரினால் தங்களது வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது 15 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த அத்துமீறும் செயலுக்கு அந்நாட்டின் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.
அதுமட்டுமின்றி பல நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் Goldman Sachs Group In, JP Morgan Chase & Co போன்ற அமெரிக்க வங்கிகள் உக்ரேன் மீதான போரை முன்னிட்டு ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.