உக்ரேனின் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர்கள் என ஆயிரங்கணக்கானோர் அதீத பலம் பொருந்திய ரஷ்யாவின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 59-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எத்தனை ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்து தெரிவித்துள்ளது.
அதன்படி 21,200 ரஷ்ய வீரர்கள் இப்போரில் மரணமடைந்துள்ளார்கள் என்றும், 162 ராணுவ வாகனங்கள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள், 83 டாங்கிகள், 1,523 இதர வாகனங்களை அந்நாடு இழந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யாவின் இந்தப் போரில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் உக்ரேனில் உயிரிழந்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.