Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: “242 இந்தியர்களுடன்”…. தலைநகர் வந்தடைந்த “சிறப்பு விமானம்”…!!

உக்ரேனில் சிக்கித்தவித்த 242 இந்தியர்களை ஏற்றுக்கொண்டு போலந்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்தடைந்துள்ளது.

உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 16 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் போரின் காரணமாக உக்ரேனில் சிக்கித்தவித்த 242 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு போலந்திலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்துள்ளது. அவ்வாறு வந்தடைந்த இந்தியர்களில் பிரேமா என்ற மாணவி இந்திய தூதரகத்தின் மீது தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி போர்நிறுத்த அறிவிப்பு வெளி வருவதற்கு முன்னர் பயங்கர குண்டு சத்தமும், பீரங்கி சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |