Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட்டிக்கும் இழுபறி…. மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் இறுதியாகவில்லை…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இறுதி முடிவு செய்யப்படவில்லை. திமுகவுடன் மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நாளை இந்த ஒப்பந்தம் இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கேட்ட பத்மநாபபுரம், மதுரவாயல், திருப்பூர் தெற்கு தொகுதி கிடைப்பதில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |