மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு க்யூட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனை நடத்த கூடாது என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் (NEET) பொதுநுழைவு தேர்வான கியூட் தேர்வையும் (CUTE) மத்திய அரசு மியூட் செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சமூகநீதி என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. விட்டால் தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை மத்திய அரசு நுழைவுத்தேர்வை கொண்டு வரும் போல” என தெரிவித்துள்ளார்.