Categories
மாநில செய்திகள்

நீட்விலக்கு மசோதா…. ஒன்றிய அரசுக்கு விரைவில் பதில்….. அமைச்சர்கள் வெளியிட்ட தகவல்….!!!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் ஈஷா யோகா மையம் சார்பில் வழங்கப்பட்ட 4 லட்சம் N95 முககவசங்களை தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட இணை இயக்குனர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதனை தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப சட்டம் மற்றும் வாடகை தாய் சட்டம் குறித்து இணை இயக்குனர்களுக்கான கருத்தரங்கில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், ஈசா அமைப்பின் சார்பில் ரூ.1கோடி மதிப்பிலான 4 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு இந்த முகக்கவசங்கள் வழங்கப்படும்.

அதனை தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு மையங்கள் குறித்த இணை இயக்குனர்களுக்கான கருத்தரங்கில் செயற்கை கருத்தரித்தல் மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தவும், தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது. நான்கு செயற்கை கருத்தரித்தல் மையங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக சேலம், ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் சீல் வைக்கப்பட்டுள்ளது. சேலம் சுதா பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருப்பதி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களும் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து அம்மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது. தமிழகத்தில் உள்ள 190 செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட உள்ளது. இதனையடுத்து நீட்விலக்கு மசோதா குறித்த அரசின் கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்கள் மூலம் பதில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலை முதலமைச்சரிடம் கையெழுத்து பெற்று ஓரிரு நாட்களில் அது ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |