நீட் ஆய்வுக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சுமார் 89 ஆயிரத்து 342 பேர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்களை பரிசீலனை செய்து, ஆய்வு குழு நாளை காலை தமிழக முதல்வரிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக பாஜக மனு தாக்கல் செய்ததை ஈபிஎஸ் கண்டிக்க கூட இல்லை. நீட் தேர்வுக்கு எதிரானவன் நான் என ஈபிஎஸ் சொல்லிக் கொள்வதைப் போல கபடநாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று அவரை விமர்சித்துள்ளார்..