நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து தேர்வுக்கான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்ததை எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. கொரோனா மூன்றாவது அலையிலிருந்து மக்கள் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.