Categories
அரசியல்

“நீட் என்றாலே அது மாணவர்களுக்கு வேட்டு தான்”…. கொந்தளித்து கடிதம் எழுதிய எம்பி….!!!!

2022 ஆம் ஆண்டுக்கான நீட் விடுதலை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என வெங்கடேசன் எம்பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் முதுகலை படிப்பிற்கான கலந்தாய்வு வரும் முன்னரே 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்னும் நடந்த பாடில்லை. இதில் அகில இந்திய இடங்கள், மத்திய மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், முதுகலை தேசிய ஆணைய பட்டயப் படிப்பு ஆகியவற்றில் உள்ள காலியிடங்களுக்கான கலந்தாய்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி மார்ச் 16, வரை நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு என்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓராண்டு வீணாகிவிடும். இவ்வளவு தாமதமாக தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. எனவே ஒரு மாத காலமாவது நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் மன்சுக் மாண்டவியாவிற்கு கடிதம் எழுதியுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |