தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் பற்றி ஆராய ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா?’ என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது . தமிழ்நாடு அரசு அமைத்த குழு நியமனம் மாநில அரசின் அதிகார வரம்பு மீறலாகும். மேலும் தமிழ்நாடு அரசு நியமித்த குழு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது என்று தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழுவை நியமிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.