இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு பயத்தால் ஏராளமான மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் நீட் தேர்வில் ரத்து செய்யக்கூடிய தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடைப்பில் வைத்துள்ளார். இந்நிலையில் திருமங்கலம் அருகிலுள்ள ஆலம்பட்டியில் தனியார் கல்லூரி ஒன்றில் கல்வி மேம்பாட்டு கேந்திர நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் கல்வி மேம்பாடு கேந்திர மாநில பொறுப்பாளர் கூறியது, மாணவர்களுக்கு இனி வரும் காலங்களில் கற்றல் கற்பித்த செயல்பாடுகளை ஒழுங்கமைத்து புதிதாக கல்விமுறை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க வாய்ந்த இடங்களை மாணவர்கள் அனைவரும் அறியும் விதமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இதனை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் நீட் தேர்வுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும். இதற்கு தகுந்தவாறு பாடத்திட்டங்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் நீட் தேர்வுக்கு மாணவர்கள் எதிர்கொள்ள ஒரே வழி. மேலும் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் முதல்கட்டமாக தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.