சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்துள்ளார். அதன் பின் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர், “நீட் தேர்வுக்கு விலக்க பெற வேண்டும் என சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறோம்.
இந்நிலையில் பல மாதங்களாக அந்த மசோதான நிலுவையில் போடப்பட்டிருந்தது.
அதன் பின்னர் நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. தற்போது நேற்றைய சந்திப்பின் போது நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்திருக்கிறார். மசோதாவை 2வது முறை திருப்பி அனுப்ப முடியாது. நீட் விலக்கு முயற்சியில் முதல் வெற்றி பெற்றுள்ளோம்.
நீட் தேர்விற்கு விலக்கு பெறும் மசோதா என்ன நிலையில் இருக்கிறது என தெரியாமல் இருந்த நிலையில் ஆளுநரை சந்தித்தபின் வெற்றி செய்தி கிடைத்திருக்கிறது. நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விரைவில் விடுதலை கிடைக்கும் எனவும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் கூறியுள்ளார்.