Categories
தேசிய செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாய்… ஆத்திரத்தில் மகள் செய்த கொடூர சம்பவம்…!!!!

மும்பை மாவட்டம், ஐரோலி என்ற பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தனது மகளை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசை பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மகளை சேர்த்துள்ளனர். ஆனால் அவருக்கு டாக்டருக்கு படிக்க சுத்தமாக விருப்பம் இல்லை. இதை அவர் பெற்றோரிடம் தெரிவித்த போதும் அவர்கள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சிறுமி செல்போனில் விடியோ பார்த்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த தந்தையும் தாயும் அவரை கண்டித்து படிக்க கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு அங்கு சென்ற தாய் அவரை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். பின்னர் கடந்த 30ஆம் தேதி தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு செய்தி வந்தது. “நான் விடை பெறுகிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது. இதை பார்த்த தந்தை மகளுக்கு போன் செய்து என்ன ஆயிற்று என்று கேட்டபொழுது, தாய் கதவை திறக்க மறுக்கிறார் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ளவர்களிடம் போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளனர்.

அவர்கள் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது அவர் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். அவரது உடலில் காயம் ஏற்பட்டிருந்தது. கழுத்தில் பெல்ட் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை செய்தனர். அப்போது சிறுமியிடம் விசாரித்தபோது தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தன்னை நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாய படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தாயை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |