Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி….. முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசியபோது, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

Categories

Tech |