நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டு பிளஸ் 1 மதிப்பெண் விவரம் கேட்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பல் மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவம் போன்றவற்றை பயில்வதற்கு நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் வேறு வழியில்லாமல் மாணவர்கள் இதை விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் 99 ஆயிரத்து 110 பேர் தேர்வு எழுதினர். அகில இந்திய அளவில் 15 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது. ஆனால் கடந்த ஆண்டு பிளஸ் 1 மதிப்பெண் விவரம் கேட்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களும் 11ஆம் வகுப்பு ஆல் பாஸ் செய்யப்பட்டனர். மதிப்பெண் பதிவு செய்ய வேண்டிய இடத்தில் பாஸ் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது. மதிப்பெண் பாடவாரியாக குறிப்பிடவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.