நீட் தேர்வு செப்டம்பர்-12ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதியோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். , ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேரும் விண்ணபித்துள்ளனர். கரூர்மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்றும், 850 பட்டியல் இன மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.