நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட்தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும். மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது.. மாநில அரசுகள் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையை தீர்மானிப்பதில் உரிமையை நிலைநாட்ட வேண்டும். அந்தந்த மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய தங்கள் ஆதரவு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.