தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் முக.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவுடன் அதிமுகவும் இணைந்து போராடுவதற்கு தயாராக இருக்கிறோம். நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசை பாராட்டிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்..