செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம், நாளையும் எதிர்ப்போம். அந்த நீட்டை தமிழகத்தில் விலக்கு அளிக்கும் வரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக எதிர்க்கும்.
தமிழக மாணவர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த நீட்டை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ்- திமுக மத்தியில் ஆட்சியில் நடந்தது தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின் படி ஒரு கவர்னர் ஆற்ற வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.