நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். சில மையங்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி விடைத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நாளை என்ற அதிகாரப்பூர்வமான வலைதளங்களில் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த முறை 18 லட்சத்திற்கு அதிகமான விண்ணப்பத்தாளர்கள் தங்களை நுழைவு தேர்வு முடிவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி எம்சிசி நீட் யூஜி கவுன்சிலிங் அட்டவணை வெளியிடுகிறது. மேலும் நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமானதால் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.