Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வு”…. ஏழை மாணவர்களுக்கு எதிரானது…. அமைச்சர் பேச்சு….!!!!!

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒளிவுமறைவின்றி மருத்துவப் படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது. நீட்தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் பெரும்பாலான தமிழக மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்.

 

Categories

Tech |