தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தைப் பற்றி ஆராய்வதற்காக நீதியரசர் ஏ .கே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிடம் பல தரப்பினர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் பல தரப்பினர் கருத்துக்கள் மற்றும் தங்களுடைய பரிந்துரை ஆகியவற்றையும் தயார் செய்து முதல்வர் மு.க ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நீட் தேர்வின் தாக்கம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே. ராஜன் குழு அரசிடம் ஒப்படைத்த அறிக்கையை இணையத்தில் வெளியிட்டனர். அவற்றில் தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வு நடந்தால் சுகாதார கட்டமைப்பு மற்றும் கல்வியும் பாதிக்கப்படும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள்.
அதனால் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட்தேர்வு மட்டுமின்றி எந்தவிதமான பொது நுழைவுத் தேர்வும் நியாயமானதாக இருக்காது. எனவே நீட் தேர்வுக்கு பின் மருத்துவ படிப்பில் சேர்ந்த ஆங்கிலவழி மாணவர்களின் சதவிகிதம் ஆனது 56.02%முதல் 69.53% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தமிழ்வழியில் கற்ற மாணவர்களின் சதவிகிதம் 14.44% சதவிகிதம் முதல் 1.7% சதவிகிதமாக குறைந்துள்ளது என நீதிபதி ஏ .கே ராஜன் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.