Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு கட்டணம் அதிரடி உயர்வு…. தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7 கடைசி நாளாகும். தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  நீட் தேர்வுக்கு மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500- ல் இருந்து ரூ.1,600 ஆக உயர்த்தி தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. EWS, OBC பிரிவினருக்கு 1,500 ரூபாய், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 900 ரூபாய், வெளிநாடு வாழ் இந்தியர்களில் அனைத்து பிரிவினருக்கும் ரூ.8,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் கட்டண செலவை மட்டும் ஜிஎஸ்டி வரியை தேர்வர்கள் தனியாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |