நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் 19-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை நீதியரசர் ஏ.கே ராஜன் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி நடைபெற்ற ஆய்வில் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் ஏ.கே ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்திருந்தனர்.