Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு நிபந்தனைகள் – பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறும் நிபந்தனைகளை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது, பர்ஸ் வைத்திருக்கக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும் மாணவ மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. அரவிந்ராஜ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்வரைவில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அபரணகள் அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்பதால் இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் எனவும் ஆபரணங்களை அகற்றும்படி மாணவிகளை நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனு மீது நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை மனிதவள மேம்பாட்டுத்துறை பொது சுகாதார சேவை இயக்குனர் தேசிய மருத்துவ ஆணையம் தேசிய தேர்வு முகாமைக்கு உத்தரவிட்டது.

Categories

Tech |