Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: நிராகரிக்க முடியாத அளவுக்கு தீர்மானம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வை ரத்து செய்யும்படி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக முன்னதாக ஏ.கே ராஜன் தலைமையிலான குழு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நீட் தேர்வு  100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வர உள்ள தீர்மானம் உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரால் நிராகரிக்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |