நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30 வது இடமும், ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43வது இடமும் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு 54.39% தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 51.28% குறைந்துள்ளது. இந்த தேர்வில் மதுரையை சேர்ந்த திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 30 வது இடமும், தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற மாணவி 702 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் 43வது இடமும் தமிழக அளவில் இரண்டாவது இடமும் பிடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஆர்.வி.சுதர்சன் என்ற மாணவர் 700 மதிப்புகளுடன் தேசிய அளவில் 84வது இடமும் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். அவர் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு உள்ளதாகவும், NCERT பாடப்புத்தகத்தை நன்கு படித்தால் நிச்சயம் நீட்டலில் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதி அரசு பள்ளி மாணவர்களில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகேஸ்வரன் 573 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஒரு விசைத்தறி தொழிலாளர் ஆவார். மேலும் 12 அரசு பள்ளி மாணவர்களில் 200 மேல் மதிப்பெண் எடுத்த 5 பேர் 7.5% ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று உள்ளனர் என்று நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.