சென்னை சைதாப்பேட்டையில் மார்க்கெட்டை ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர் சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் என்பது வரலாற்று சிறப்புமிக்க வணிக வளாக பகுதி தற்போது மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற இருப்பதால் இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் அவர்களுக்கான கடைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு கடந்த 2017 ஆம் வருடம் அதிமுக அரசு ஒப்புதலின் பேரில் நான்கு வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு வந்ததிலிருந்து இந்த ஆண்டுதான் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருக்கின்றார்கள். நீட் தேர்வு எழுதி இருக்கின்ற மாணவர்களுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 564 பேர் அதிகம் மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் கொண்டு தொடர்ச்சியாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் வரும்போது தேர்ச்சி பெறாத குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களை மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட மனு ஆலோசகர் மூலமாக ஆலோசனை வழங்கப்படும். இது பற்றி ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த மாணவர்கள் குறித்த தகவல்களை 104,1100 என்ற எண்களின் மூலமாக அளிக்க வேண்டும். இதனை அடுத்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனைகளையும் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கையும் எடுக்கப்படும். அதேபோல தேர்ச்சி பெறாத மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை திட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது தேர்வு என்பது எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.
நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று கூட மத்திய அரசு சந்தித்தபோது இது பற்றி கடிதம் வழங்கியிருக்கிறோம் அதிகம் பேர் இந்த வருடம் நீட் தேர்வு எழுதி இருக்கிறார் என்பதற்காக அவர்கள் நீட் தேர்வை ஆதரிக்கிறார்கள் என்பது அர்த்தமில்லை. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பின் விரைவில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் சித்தா பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான கடிதம் நாளையோ நாளை மறுநாளோ ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கின்றோம். 1890 மாணவர்கள் இங்கேயே படிப்பது பற்றி கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக வழக்கு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் வர இருக்கிறது நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.