நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கொளுத்தினிபட்டியில் சேகர்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரீத்தி(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் பிரீத்தி தோல்வி அடைந்தார். இந்நிலையில் வேங்காம்பட்டியில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி பிரீத்தி நீட் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த மாதம் பிரீத்தி நீட் தேர்வை எழுதியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த பிரீத்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரீத்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.