Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி மனு… நிராகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு…!!!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்து, தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி உரிய பாதுகாப்புகளுடன் தேர்வுகள் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணிக்க நாம் அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்றங்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக செயல்படத் தொடங்கி விட்டன என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலமாக திட்டமிட்டபடி நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |