தமிழகத்தில் நீட் தேர்வு ரத்த செய்வது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர் , தமிழகத்தில் கடந்த 19 நாட்களிலே 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் முதல் டோஸ் 56% மட்டுமே போட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் சட்டமன்றத்தில் சட்டரீதியான முன்முடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதற்குள் மாணவர்கள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மனநல ஆலோசகர்கள் தொடர்ந்து தங்களது பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் 15 நாட்களுக்குள் ஆலோசனை முடிவடையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் .