மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும். கடந்த 2016ஆம் வருடம் முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்ததாக கூறப்பட்ட நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.