Categories
அரசியல்

நீட் தேர்வு விலக்கு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது .

நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான உரிமையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்து விட்டது. நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாகவும் வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே இது  சாதகமானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் பேசியதாவது: “நீட்தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது.  நீட்தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். நீட் தேர்வு 12 ஆண்டு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது. மாணவர்களின் 12 ஆண்டு பள்ளிக் கல்வியால் எந்த பயனும் இல்லை என்ற நிலை உருவாகிறது. மாநில அரசு நிதியிலிருந்து நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. நீட் விலக்கு தொடர்பாக சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்

Categories

Tech |