Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு விலக்கு…. “உதவி பண்ணுங்க ஐயா”…. ஸ்டாலினை நாடிய ஆந்திர மாணவர்…. அவர் சொன்ன பதில்?!!!!

திமுக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவதாக கூறி ஆட்சியை பிடித்தது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு பின்னர் ஆளுநருக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகம் சென்று கொண்டிருந்த வழியில் டி.டி.கே சாலையில் ஆந்திராவை சேர்ந்த என்.சதீஸ் என்ற மாணவன் “CM SIR HELP ME” என்ற பதாகையுடன் ஸ்டாலினை சந்தித்தார். மேலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு தனது ஆதரவையும் நன்றியையும் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் என்னால் நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பினை படிக்க இயலாமல் போய்விட்டது.

எனவே ஆந்திர மாநிலத்திற்காகவும் உங்கள் போராட்டம் இருக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். அந்த மாணவனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து சட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே அகில இந்திய அளவிலும் நீட் தேர்வு குறித்த குரலை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். எனவே ஊருக்கு நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்று அந்த மாணவனிடம் கூறினார். பின்னர் அந்த மாணவன் முதல்வருக்கு நன்றி தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

Categories

Tech |