Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விலக்கு…. மீண்டும் செக் வைக்க தமிழக ஆளுநர்…. ஷாக்கான ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 8-ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த நீட் விலக்கு மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தமுறை காலதாமதம் செய்யாமல் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பி வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுகவின் எதிர்பார்ப்புக்கு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி செக் வைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆளுநர் ஒரு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினால் சட்டப்பேரவையில் அதே மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பும்போது ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது.

மேலும் மத்திய அரசு அறிவுறுத்தினால் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று தெரிகிறது. இதற்கிடையே குடியரசுத் தலைவருக்கு நீட்தேர்வு விலக்கு மசோதாவை அனுப்பி வைத்து அவர் மூலம் மசோதாவை கிடப்பில் போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆளுநர் ஆர்.என்.ரவி கிரீன் சிக்னல் கொடுத்தாலும் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ரெட் சிக்னல் போட வாய்ப்புள்ளது.

எனவே மத்திய அரசு ஆளுநரிடம் இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு அந்த மசோதாவை அவர் மூலமாக கிடப்பில் போட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஆளுநர் சர்ச்சைகளில் இருந்து விடுபட முடியும். இருப்பினும் திமுக தரப்பு டெல்லியில் தனிப்பட்ட முறையில் சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |