தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்ட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளின் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து முடிவு எடுக்கப் பட்ட பின்னரே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்றாலும் கூட மாணவர்கள் உடல்நலம் அதைவிட முக்கியம். அதனால் நன்கு ஆலோசனை செய்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.