Categories
அரசியல்

நீட் தேர்வு விவகாரம்….! அப்பாடி ஒருவழியாக அமித்ஷாவிடம் கோரிக்கை வச்சாச்சு….!!!!

தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதற்கான கோரிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக எம்பிக்கள் முன்வைத்தனர் .

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு மற்றும் எம்பிகள் உட்பட சிலர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தனர்.

ஆனால் அவர்கள் மூன்று முறை முயற்சி செய்தும் அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை. மேலும் அமித்ஷா பல்வேறு வேலைகளில் இருப்பதாகவும், இதனால் தமிழக எம்பிகளை சந்திக்க முடியவில்லை எனவும், ஜனவரி 17 ஆம் தேதி கண்டிப்பாக சந்திப்பதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு உட்பட தமிழக எம்பிக்கள் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தனர்.

Categories

Tech |