Categories
அரசியல்

நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறோம்…. சீக்கிரம் வெற்றி கிடைக்கும்…. அமைச்சர் நம்பிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமனதாக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடையை திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அவருடைய கோரிக்கைக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

தனைதொடர்ந்து இன்று நடக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் நடக்கும் கடைசி தேர்வாக இருக்குமா?  என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறோம். விரைவில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும்  உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |