Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை திணித்தது அதிமுக தான்…. கேஎஸ்.அழகிரி அறிக்கை…..!!!!

தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு  திணிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்குப் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாகப் பதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் திரும்பத் திரும்பப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. முயல்கிறது. நீட் தேர்வு கட்டாயம் என்ற மசோதாவை நிறைவேற்றியே பொழுது 39 மக்களவை 11 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த போதும் அதை அதிமுக எதிர்க்கவில்லை என்றும், அனிதா உட்பட பல்வேறு மாணவர்களின் தற்கொலைக்கு அதிமுகவும் பாஜகவும் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |