நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்பதால் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நீட் தேர்வு முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் அதன் ஒன்றிய அரசு தான் செய்ய முடியும் என்ற நிலையில் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து போராட முயற்சி எடுக்க வேண்டும். மேலும் பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக கூட்ட வேண்டும் என கூறியுள்ளார். தற்போது எம்பிபிஎஸ் இடங்களில் 15%, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களில் 50%. சிறப்பு படிப்புகளில் 100% இடங்களை தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு அளித்து வருகிறோம். அதை உடனடியாக நிறுத்த வேண்டும்.