Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்வது திமுக கடமை… அன்புமணி ராமதாஸ்…!!!

நீட் தேர்வை ரத்து செய்வது திமுகவினரின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆர் எஸ் ராஜன் தலைமையில் குழு அமைத்து நீட்தேர்வு பாதிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி தேர்தலின்போது வாக்குறுதி அளித்த திமுக நீட் தேர்வை ரத்து செய்வது கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் என்று குற்றம் சாட்டிய அவர் நீட் தேர்வை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு பாமக முழுமையாக துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |