Categories
தேசிய செய்திகள்

நீட் பயிற்சி மையத்திற்கு சென்ற தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறி துடித்த மகள்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!!!

ராஜஸ்தானில் பல ரவுடி கும்பலுக்கு இடையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. அதாவது, ரவுடிகும்பல் இடையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அம்மாநிலத்தின் சிகர் பகுதியை சேர்ந்தவர் தரசந்த் கட்வசரா. இவருடைய மகள் கொனிதா(16) அதே பகுதியிலுள்ள நீட்பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தன் மகள் கொனிதாவை நீட் பயிற்சி மையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வர நேற்று மதியம் தரசந்த் கட்வசரா  அங்கு சென்றார். அப்போது அப்பயிற்சி மையம் அருகில் இருதரப்பு ரவுடி கும்பலுக்கு இடையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் பிரபல ரவுடி ராஜூ தீக் தன் வீட்டின் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் அவரை கொன்ற ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்ற போது தரசந்த் கட்வசராவிடமிருந்து கார் சாவியை வாங்க முயற்சித்தது. எனினும் கார் சாவியை கொடுக்க தரசந்த் மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த ரவுடி கும்பலை சேர்ந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தரசந்தை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த தரசந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு நீட்பயிற்சி மையத்திலிருந்து வெளியே வந்த கொனிதா தன் தந்தை தரசந்த் நடுரோட்டில் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின் இறந்த தன் தந்தையின் உடலை மடியில் வைத்து கொனிதா கதறி அழுதார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |