Categories
தேசிய செய்திகள்

நீட் மசோதாவை திருப்பி அனுப்பி வைத்த கையோடு….. டெல்லி பயணிக்கிறார் ஆளுநர்….!!

2021 சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஆளுநர் அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடியாது எனக் கூறி மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என அறிவித்தார். இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் தற்போது தமிழக ஆளுநர் கே என் ரவி வருகிற 7ஆம் தேதி டெல்லி செல்கிறார். இதனால் தமிழகம் தொடங்கி டெல்லி வரையிலான அரசியல் சூழல் மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.

Categories

Tech |