நீட் தேர்விற்கு மத்திய அரசே காரணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அதிமுக நாங்களும் நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டங்கள் நடத்தினோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், நீட்தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்போது மேட்டூரை சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துள்ளார். இதற்கு அன்றைய அதிமுக ஆட்சிதான் முழு பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.