Categories
மாநில செய்திகள்

“நீட் முதல் கச்சத்தீவு வரை”…. பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள்…..!!!!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று  சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து  டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசினார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

அந்த ஆலோசனையில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள். தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி ஆதாரங்கள் மற்றும் ஜிஎஸ்டி வரி வைப்பு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும்.

கொரோனா  காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு சலுகை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை முன்னெடுக்க முயற்சி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

Categories

Tech |