நீட் தேர்வு மோசடிகளின் கூடாரம் என்று சாடி உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கூடாது என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநிலத்தை மையமாக வைத்து டெல்லியிலும், ஜார்கண்டிலும் நடத்தப்பட்டதாக கூறப்படும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மோசடி தகவல் குறித்து வெளியான தகவல்கள் பேரதிர்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வை மோசடிகளின் கூடாரமாக மாறி இருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மை ஏற்படுத்தியிருக்கிறது.
நீட் தேர்வு மோசடிக்காக போலி சான்றிதழ், அடையாள அட்டையுடன் மோசடிகள் நடந்து இருக்கிறது. நீட் முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெறுவது இது முதல் முறையல்ல. தமிழ்நாட்டில் கடந்த 2019- 20 ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 10 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. போலியாக தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்ட பிறகும் கூட அவர் இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போதுகூட டெல்லியில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் யார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இது நீட் முறைகேடு செய்தவர்களை காப்பாற்றும் முயற்சியாக இருக்கிறது. மோசடி செய்பவர்களுக்கு அசைக்க முடியாத ஆள் பலம் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மோசடிகலின் கூடாரமாக இருக்கும் நீட் தேர்வை மத்திய ரத்து செய்துவிட்டு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.